Monday, March 3, 2008

சி.பி.எம். கட்சியின் சாதீய எதிர்ப்பு நாடகமும், சந்திப்பு அவர்களின் பின்னனி (ஜால்ரா) இசையும்.....

'தெண்ணை மரத்தில் இடி இடித்தால், பணை மரத்தில் எப்படி நெறிகட்டும்?' என்பார்கள் நமது முன்னோர்கள். அதைப் போலவே, நாம் பாரதியை விமர்சிப்பது, சந்திப்புக்கு வயிற்றில் புளிகரைக்கிறது. இப்படித்தான் தோழர். மதிமாறன் "'பாரதி'ய ஜனதா பார்ட்டி" என்ற தலைப்பில் தலித் முரசு இதழில் பாரதியின் 'பார்ப்பன சார்பு' தன்மையை அம்பலப்படுத்தி தொடராக எழுதிய போது, சிலர் நான் பாரதியின் மானத்தைக் காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று கிளம்பிவந்து எதுவும் போனியாகததால் கிளம்பிய கூடாரத்திலேயே தஞ்சம் புகுந்து கொண்டனர். இது இவர்களின் வழக்கமான வாதிடும் முறை. சந்திப்பு, இவர்கள் பாசறையின் கடைசி பெஞ்ச் மாணவன்.அவர் நமது விமர்சனங்களை சந்திக்கமுடியாமலிருப்பதன் காரணமும் இதுதான். இருப்பினும் அவருக்காக தொடர்ந்து நாம் பதிலெழுத வேண்டியிருப்பது ஏன் என்றால்?! அவருடைய வாசகர்களில் சிலர் நம்மிடம் தொடர்ந்து வற்புறுத்திக் கேட்பதால் தான்.இனி விஷயத்திற்கு வருவோம்....


முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போல், 'தமிழ்மணி' எனும் பெயருக்குள்ளே மறைந்து கொண்டு தங்கள் பூணூலுக்குள்ளேயே ஒருவரையொருவர் முடிந்துவைத்துக் கொண்டு (கமுக்கமாக) பார்ப்பணியத்தை புதுப்பிக்க ஒருசில அம்பிகள் கிளம்பியுள்ளது சில நாட்களுக்கு முன் அம்பலமாகியது எல்லோருக்கும் தெரிந்ததே. அந்த அம்பிகள் கூட 20 வரிகளுக்கு இந்த சமூக அநீதிகளைப்(?!) பற்றி அங்கலாய்த்துவிட்டு, பிறகு தான் ஒரு பார்ப்பனிய வார்த்தையை பார்த்து சொருகுகிறார்கள் தங்கள் படைப்புகளில், நம்முடைய கழுகுப்பார்வையில் பட்டு அம்பலமாகிவிடாமல் தப்பித்துக் கொள்வதற்காக. (அவ்வாறிருக்கும் போதே, அவர்களை நமது தோழர் 'சம்பூகன்' குடுமியைப் பிடித்து இழுத்துவந்து முச்சந்தியில் வைத்து அம்பலப்படுத்திவிட்டார்.)


இதே பாணியைத்தான் பாரதியும் மேற்கொண்டார். தன்னுடைய பார்ப்பனிய, இந்துத்துவ சார்பு நிலையை வெளிப்படையாகத் தெரியாமல் மூடிமறைப்பதற்கு பாரதி கடைபிடித்த 'சித்து விளையாட்டு'த்தான் இந்த சாதீயம், பெண்ணீயம், தேசவிடுதலைப் புராணம், சோவியத்துப் புரட்சி, இன்னபிற இத்தியாதிகளெல்லாம்.


இது பாரதியின் பாணியோ அல்லது தமிழ்மணியின் பாணியோ அல்ல தோழர்களே. தம்மைப் பொதுமைப்படுத்திக் கொண்டு அதன் மூலமாக பெரும்பாண்மை மக்களின் கருத்தாக்கமாக தங்களது செயல்களை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக உருவகப்படுத்த‌ பார்ப்பனியம் செய்கின்ற 'கண்கட்டி வித்தை' தான் அது.


பாரதி தன்னை (பார்ப்பன) சாதிச் சார்பற்றவனாகக் காட்டிக் கொள்வதற்காக எவ்வளவு முயன்றானோ, அதனினும் கூடுத‌லாக தனது முயற்சிகளை சி.பி.எம். செய்ய வேண்டியுள்ளது. பாரதிக்கு ஓட்டு தேவைப்படவில்லை, சி.பி.எம்மிற்கு தேவைப்படுகிறது, இதுதான் இவர்களுக்கிடையிலான ஒற்றுமையும் வேற்றுமையும். இதிலிருந்து வெளித்தோன்றுபவைதான் சந்திப்பு போன்றோர்களின் 'பாரதி புராணம்'. இப்படி வெளிப்படையான பார்ப்பன சார்பு நிலையை அக்கட்சி நிரந்தரமாகக் கொண்டிருப்பது எப்படி? ஏன்? என்பதை அனைவருக்கும் (சந்திப்பு உள்பட)தெரியப்படுத்துவதுதான் தான் இந்த பதிவின் நோக்கம்.


'புரட்சித்தலைவி' எனும் 'ஜெ'வின் திருநாமத்தில் வரும் 'புரட்சி'யையே நமது காம்ரேடுகள் 'தேசப் புரட்சி'யாகப் புரிந்து கொண்டு அல்லது நாட்டு மக்களைக் குழப்பிவிட்டு ஓட்டுகளின் மூலம் ஆதாயம் தேடுபவதைப் போலத்தான் பாரதியின் 'சொவியத்துப் புரட்சி'யைப் பார்த்து புளகாங்கிதமடைகிறார்கள். அதையே தங்களது புரட்சிப்பாதையாக தெரிவுபடுத்துகிறார்கள்.தோழர். ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டதைப் போல, சோவியத்தின் பாட்டாளிவர்க்க புரட்சி (அதாவது அக்டோபர் புரட்சி)க்கு பாரதியின் குடுமி ஆடவில்லை. அதற்கு முன் நடந்த முதலாளித்துவப் புரட்சிக்குத்த்தான் ஆடியது என்பதை காம்ரேட். சந்திப்பு அவர்களுக்குத் தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.


ஆனால் பார‌தியும் சரி, சி.பி.எம்மும் சரி பெண்ணீயத்தை, இன்னபிறவற்றைப் போல சாதீயத்தை மேலோட்டமாக விட்டுவிடுவதில்லை. அதில் தான் தமது 'தொழில் நுட்பத்தை' இருவருமே கடைபிடிக்கிறார்கள். ஏனெனில் பார்ப்ப‌னீய‌த்தின் ஆணிவேர் இங்குள்ள‌ சாதிய‌ம்ச‌ங்க‌ளில் தான் உள்ள‌து என்ப‌து பார‌திக்கும் தெரியும் அவ‌ன‌து சீட‌ர்க‌ளான‌ ச‌ந்திப்புவ‌கைய‌றாவுக்கும் தெரியும். அத‌ற்கு இவ‌ர்க‌ளின் சாதீய‌த்திற்கெதிரான‌ செய‌ல்க‌ளிலேயே பார்க்க‌லாம். இவ‌ர்க‌ளின் சாதீயத்திற்கெதிரான போராட்டங்களின் இல‌க்கு சாதிய‌ எதிர்ப்பு அல்ல‌, சாதீய‌ ஒற்றுமை தான்.



இந்த‌ப் போலிக‌ளின் சாதிய‌ எதிர்ப்புண‌ர்விற்கு சாட்சிய‌ம் வேண்டுமா?, ஒருசில‌ மாத‌ங்க‌ளுக்கு முன் 'வெகுவிம‌ரிசையாக‌' கொண்டாட‌ப் ப‌ட்ட 'தேவ‌ர் ஜெய‌ந்தி' என்ற 'தேவ‌ர் சாதி வெறிய‌ன் முத்துராம‌லிங்க‌த்தின்' பிற‌ந்த‌ நாள் அன்று, ப‌சும்பொண்ணில் (முத்துராம‌லிங்க‌த்தின் நினைவிட‌த்தில்) ம‌ல‌ர்வ‌ளைய‌த்துட‌ன் நின்றுகொண்டு ப‌ல்லிளித்த‌ என்.வ‌ர‌த‌ராஜ‌ன் அவ‌ருடைய அணியினின‌ரான‌ பார‌தியின் வ‌ழித்தோன்ற‌ல்க‌ளை ச‌ற்று உற்று நோக்கிப் பாருங்க‌ள். அவ‌ர்க‌ளின் சொற்க‌ளில் சாதீய‌ எதிர்ப்பையும், செய‌ல்க‌ளில் சாதிய‌ பிணைப்பையும் உய‌ர்த்திக் காட்டுவார்க‌ள்.


இத‌ற்கு ப‌தில் சொல்கிறேன் என்று, ச‌ந்திப்பு அவ‌ர்க‌ள் (நாம் மிக‌வும் ம‌ரியாதை குறைவாக‌ எழுதுகிறோம் என்று சொல்கிறார‌ல்ல‌வா? அத‌னால் தான் இந்த‌ 'ச‌ந்திப்பு அவ‌ர்க‌ள்' எல்லாம்) "க‌ருணாநிதி, ஜெ, போன்றோர் கூட‌த்தான் சென்று அஞ்ச‌லிசெலுத்தியுள்ள‌ன‌ர், எங்க‌ள் த‌லைவ‌ரைம‌ட்டுமே விம‌ர்சிப்ப‌து சி.பி.எம். என்ற‌ காழ்ப்புண‌ர்ச்சியால் தான்" என்று கேட்டால் யாரும் ஆச்ச‌ரிய‌ப்ப‌ட‌ வேண்டாம்.



சாதியத்திற்கு எதிராக தாழ்த்தப் பட்டோருக்கு பாரதி பூணூல் போட்டுவிட்டாராம், 'ஜெ... வைக்கோ'வுக்கு போட்டதைப் போல... அல்ல‌து சுப்பிர‌ம‌ணிய‌சாமி உச்ச‌ நீதிம‌ன்ற‌த்துக்கு போட்ட‌தைப் போல...(இதைக் கேட்ட‌ல் ந‌ம‌து காம்ரேடுக‌ள் 'ப‌ர‌தியை அவ‌ம‌தித்த‌தைக் கூட ஏற்றுக் கொள்ள‌லாம், கோர்ட்டை அவ‌ம‌திப்ப‌து அபாய‌க‌ர‌மான‌து' என்று பொழிப்புரை கூற‌லாம்.) அத‌னால் தான் CPIM.ன் மூத்த‌ த‌லைவ‌ரும் பாராளும‌ன்ற‌ சபாநாய‌க‌ருமான 'சோம்நாத் அய்யர்' த‌ம‌து பேர‌க்குழ‌ந்தைக‌ளுக்கு பூணூல் கல்யாண‌ம் செய்து வைக்கிறார். பார‌தியின் பார்ப்ப‌ன‌த் த‌ன்மையினை இவ‌ர்க‌ள் விம‌ர்சிக்க நேர்ந்தால், சோம்நாத் அய்ய‌ரை விட்டுவிட முடியுமா? இவ‌ர்க‌ளின் எழுத்துக்க‌ளில் என்றைக்காவ‌து 'பார்ப்ப‌ன‌ன்' என்ற‌ வார்த்தையை பார்க்க‌முடியுமா? ஏனெனில் 'பார்ப‌ன‌ன்' என்றால் க‌டுமையான‌ வார்த்தை, இப்ப‌டி எழுதினால் ம‌க்க‌ளிட‌மிருந்து த‌னிமைப்ப‌டுத்த‌ப் ப‌டுவீர்க‌ள் என்கிறார்க‌ள். சமூக‌த்தில் 'ப‌றைய‌ன்' இன்னும் அப்ப‌டித்தானே அழைக்க‌ப் ப‌டுகிறான்.


இதைக்கேட்டால், பார்ப்ப‌ன‌க் கேடிக‌ளை வ‌ர்க்க‌க் க‌ண்ணோட்ட‌த்தோடு பார்க்க‌ச் சொல்லி ந‌ம‌க்கு வ‌ர்க்க‌ பாட‌ம் புக‌‌ட்ட‌வ‌ருவார்க‌ள். பார‌தியிட‌மும், சுஜாதாக்க‌ளிட‌மும் சென்று வ‌ர்க்க‌ ஒற்றுமை பேனுவார்க‌ள். அவர்கள் சார்ந்திருக்கிற வர்க்கம் என்ன என்பது 'ஊரறிந்த இரகசியம்', அப்படியானால், அவ‌ர்க‌ள்சார்ந்திருக்கிற‌ வ‌ர்க்க‌ம் தான் எமது வ‌ர்க்க‌ம் என்று ப‌ச்சையாத் தெரிவிக்க‌ வேண்டிய‌துதானே.


சி.பி.எம்மின் பார்ப்ப‌ன‌த்த‌ன்மைக்கு முதலில் ப‌ச்சைக்கொடி காட்டிய‌வ‌ர் யார் தெரியுமா?இந்தியாவுக்கான‌ மார்க்சிய‌ம் என்று சொல்லி மார்க்சிய‌த்தை பார்ப்ப‌னீய‌த்திற்குள் ம‌றைத்துவைக்க‌ முனைந்த‌வ‌ர் யார் தெரியுமா?, "வேத‌ங்க‌ள், உப‌நிஷ‌த‌ங்க‌ள் முத‌லிய‌ பார‌தீய‌ க‌லாச்சார‌ப் பொக்கிஷ‌ங்க‌ளும் மார்க்சிய‌..லெனினீய‌த்தின் புர‌ட்சிக‌ர‌த் த‌த்துவமும் இணைந்துள்ள‌துதான் நான் உய‌ர்த்திப் பிடிக்கின்ற 'இந்திய‌ மார்க்சிய‌ம்'. நான் பிர‌திநிதித்துவ‌ப் ப‌டுத்துகின்ற‌ மார்க்சிய‌ம்..லெனினிய‌ம் தான் உண்மையான‌ பார‌தீய‌த்தத்துவ‌ம் என்று கூட‌ உரிமை பாராட்டுவேன்" என்று சொன்ன‌வ‌ர் ஆதிச‌ங்க‌ர‌ரோ, விவேகான‌ந்த‌ரோ அல்ல‌ தோழ‌ர்களே, அது 'கேர‌ள‌த்து ஆதிச‌ங்க‌ர‌ன்' என்று த‌ன்னைத் தானே அடைய‌ள‌ம் காட்டிக் கொண்ட‌ 'ச‌ங்க‌ர‌ன் ந‌ம்பூதிரி'யாகிய‌ E.M.S.ந‌ம்பூதிரிபாடுதான்.

மார்க்சிய‌ம் எனும் சூரிய‌னை, பார்ப்ப‌னிய‌க் கைக‌ளால் ம‌றைத்துவிட‌முடியும் என்று ந‌ம்பிய‌ ம‌டைய‌ன். இவ‌ன் தான் உல‌க‌த்துக்கே மார்க்ஸ் பெய‌ரைச் சொல்லி எப்ப‌டி ஓட்டுப் பிச்சை எடுப்ப‌து என்ப‌தையும், அத‌ன் மூல‌ம் தான் சார்ந்த 'பார்ப்ப‌ன, முத‌லாலித்துவ' வ‌ர்க்க‌ங்க‌ளுக்கு எப்படி சேவை செய்வது என்பதையும் சொல்லிக்கொடுத்த‌வ‌ன்.



இவ்வாறாக‌,எப்படி, எதற்காக, பார்ப்ப‌னீய‌ம் த‌ன்னைப் பொதுமைப் ப‌டுத்திக் கொள்வ‌த‌ற்காக தன‌து பாசிச‌ முக‌த்தை ம‌றைக்கிற‌தோ, அதேபோல் தான் சி.பி.ஐ/எம் போன்ற‌ போலிக‌ள் த‌ங்க‌ள‌து பாசிச‌ கொலைமுக‌த்தின் முக‌மூடியாக‌ மார்க்சிய‌த்தைப் ப‌ய‌ன் ப‌டுத்துகிறார்க‌ள். சாதீய‌த்திற்கெதிராக‌வும், பெண்ணீய‌த்திற்கெதிராக‌வும் தான் போராடுவ‌தாக‌ காட்டிக் கொள்வ‌தும் அத‌னை பார‌தியின் வ‌ழித்தோன்ற‌ல்க‌ளாய் சித்த‌ரிப்ப‌துவும் எத‌ற்கென்றால், இதே சாதீய‌த்தையும், பெண்ணீய‌த்தையும் நிஜ‌க் கதாநாய‌கனாய் க‌ள‌த்தில் ச‌ந்தித்த 'பெரியார்' எனும் பேர‌லையிலிருந்து த்ம்மையும் பார்ப்பனியத்தையும் காத்தும் கொள்ளும் 'க‌யமை'யுண‌ர்வோடுதான்.

ந‌ன்றி.
ப‌க‌த்.

4 comments:

வால்பையன் said...

இதுதான் உங்களின் இரண்டாவது பதிவா!!!
இவ்வளவு சூடாக இருக்கிறது!

வால்பையன்

சந்திப்பு said...

சாதியத்தை மறைக்கும் ம.க.இ.க.

பாரதியை எதிர்க்கும் ம.க.இ.க.வின் பார்வையில் காமாலைக் கண்ணே காட்சியளிக்கிறது. பாரதியின் புரட்சிப் பார்வையை - முற்போக்கு சிந்தனையை ஏற்றுக் கொண்ட எவரும் ம.க.இ.க.வின் பார்வையை ஏற்க மாட்டார்கள்.

ம.க.இ.க. - பகத் போன்றவர்கள் பாரதியை எதிர்ப்பதற்கு அவர்கள் கையாளும் ஒரே கருத்து பார்ப்பான் என்ற கருத்தே தவிர வேறு எதுவுமில்லை.


உண்மையில் இவர்களுக்கு பாரதியுடன் கருத்து முரண்பாடு எங்கெங்கு இருக்கிறதோ அதையெல்லாம் எழுதி தமிழுக்கு சேவை செய்து - பட்டங்களை சுட்டிக் கொள்ளட்டும். ஆனால் அதை விடுத்துவிட்டு ஒரே பல்லவியை சி.பி.எம். எதிர்ப்பை - அது பார்ப்பன அடையாளத்தோடு இயங்குகிறது என்ற செல்லரித்துப் போன குப்பைகளை இங்கே உமிழ்வதால் ம.க.இ.க.வின் சாதிய அடையாளத்தை மறைக்க முடியுமா?


நீங்கள் பாரதியை பார்ப்பான் என்ற காரணத்திற்காக எதிர்க்கிறீர்கள் என்றால்? ம.க.இ.க. மாத்தையன் பார்ப்பானை எந்த அடிப்படையில் ஏற்றுக் கொள்கின்றீர்கள்? ஊருக்குத்தான் உபதேசமா?


சி.பி.எம். எப்போதும் பார்ப்பனீய சித்தாந்தத்தை எதிர்த்தே வந்துள்ளது. தொடர்ந்து எதிர்த்து போராடும். அதே சமயம் எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் அவன் வர்க்கப் பிரச்சினைகளுக்காகவும் - சமூக மாற்றத்திற்காகவும் தன்னுடைய சாதிய அடையாளத்தை விட்டு வரும் போது அவர்களது சமூக பார்வையை சி.பி.எம். அங்கீகரிக்கும். தன்னுடன் இணைத்துக் கொள்ளும்.


செல்வாக்கு இழந்த சொத்தை வாதங்களை இனிமேலாவது வைக்காமல் இருங்கள்? அது சரி இ.எம்.எஸ்.சை விமர்சிக்கும் உங்கள் குழுவிற்கு தமிழகத்தை தாண்டி எங்காவது அடையாளம் உண்டா? எல்லாம் குண்டுச் சட்டையில் குதிரை ஓட்டும் வேலைதானே?

உங்களது மாபெரும் புரட்சியெல்லாம் கும்பமேளா நடத்துவதுதானே? அதாவது தமிழகம் முழுவதும் உள்ள எல்லா ம.க.இ.க. - பு.வி.மு.. வி.தொ.மு. என எல்லா மு.மு.மு.மு.மு.மு.க்களையும் இணைத்துக் கொண்டு புரட்சி செய்வதாக பித்தலாட்டம் செய்யும் பிழைப்புவாதம் தானே?

உங்களது மாநில அமைப்பு கமிட்டி பற்றி தமிழகத்தில் யாருக்காவது தெரியுமா? மக்களுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? மக்களிடம் இருந்து அமைப்புகளை விலக்கி வைக்கும் சாமார்த்தியத்தை செய்யும் பார்ப்பனீத்தனம்தானே உங்களது அமைப்பிலும் நடைபெறுகிறது?

ஏகலைவன் said...

வா சந்திப்பு ஒன்னத்தான் இத்தன நாளா தேடிக்கிட்டு இருக்கிறேன்.

ஒன்னோட விவாதம் பன்றத நெனச்சா எனக்கே வெக்கமா இருக்குது. ஏற்கெனவே பலமுறை காறித்துப்பியாகிவிட்டது, இன்னும் ஒனக்கு சொரனைவந்ததாமட்டும் தெரியல்ல.

யாராவது வந்து ஏதாவது ஒரு கேள்வியக் கேட்டுத்தொலைக்க இன்னும் எத்தன நாள் கானாப்போவியோ புரியல்ல.

சுஜாதாகிட்டயும் கமல்கிட்டயும் வர்க்கப்பார்வை வீசுற உன்னோட கட்சியோட பார்ப்பன சார்புநிலை சென்றவாரம் மவுண்ட் ரோட்டுல சந்திசிரிச்சுது. அத நான் எங்கண்ணால பாத்தேன். பதிவும் போட்டிருக்கிறேன் நீ அங்க வந்து பதில் சொல்லேன்.


///// மக்களிடம் இருந்து அமைப்புகளை விலக்கி வைக்கும் சாமார்த்தியத்தை செய்யும் பார்ப்பனீத்தனம்தானே உங்களது அமைப்பிலும் நடைபெறுகிறது?/////


இத‌யேத்திரும்ப‌த் திரும்ப‌ எத்த‌ன‌ த‌ட‌வ‌தான் கேப்ப‌. ஒம்ம‌ண்ட‌க்குள்ள‌ என்ன‌ இருக்குன்னே என‌க்குத்தெரிய‌ல. நாங்க மக்களோடத்தான் இருக்கோம் நீதான் கெனத்துக்குள்ள இருந்து கத்திக்கிட்டு திரியற.

பகத் said...

தோழர் மருதையன் பற்றி நாங்கள் புதியதாக எந்த விளக்கமும் அளிக்கவேண்டியதில்லை. அவர் எந்த விதமான பார்ப்பன அடையாளங்களையும் தாங்கி இல்லை. மாறாக பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டங்களில் எந்த சமரசமுமின்றி ஈடுபட எங்களோடு நிற்பதுவும் அவரே.

இந்தியாவை எதிர்நோக்கியுள்ள‌ ச‌வால்க‌ள் இர‌ண்டில் ஒன்று பார்ப்ப‌ன‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம், ம‌ற்றொன்று ம‌றுகால‌ணியாதிக்க‌ம் என்று வ‌ரைய‌றுத்து, இர‌ண்டையுமே க‌ள‌த்தில் எதிர்த்து நிற்கிறோம். இவ‌ற்றை திட்ட‌மிட்டு ப‌ர‌ப்பும் ஆளும்வ‌ர்க்க‌த்தை 'கம்யூனிச போர்வையோடு' ஆத‌ரித்து செய‌லாற்றும் உம‌து பித்த‌லாட்ட‌ப் போக்கை ம‌க்க‌ள்முன் அம்ப‌ல‌ப்ப‌டுத்துவ‌தும் எங்க‌ள‌து மிக‌ முக்கிய‌க்க‌ட‌மையாக‌வும் உண‌ர்கிறோம்.

இங்கே என்னுடைய பதிவில் நான் சுட்டிக்காட்டியிருப்பது பிறப்பால் பார்ப்பனனாக இருந்துவிட்டு, பிறகு முற்போக்கு வேஷம் கட்டி ஆடும்போதும் கூட தனது பார்ப்பன அடையாளங்களை வெட்கமின்றி சுமந்து திரிபவர்களைப்பற்றியதுதான்.

ஆர்.எஸ்.எஸ். காரனை விஞ்சும் வெறியோடு இந்து இரத்தம், இந்து உணர்வு, இந்து தேசம் போன்ற வார்த்தைகளை தனது கவிதைகளின் மூலம் வீசியவன் பாரதி என்கிறார் தோழர்.வே. மதிமாறன்(http://mathimaran.wordpress.சொம்). அவருடைய இந்த வலைதளத்தில் 'முற்போக்கு பாரதியும் பாரதிபக்தர்களும்' கோவனம் கூட இல்லாமல் தொங்கிக்கொண்டு இருக்கின்றனர். சென்று பாருங்கள்.

கட்டபொம்மனைப்பாட வக்கில்லாத பார்ப்பன பாரதி, எட்டப்பனின் அரன்மணைக்குச் சென்று கவிபாடி அந்தத் துரோகவம்சத்தின் காலடியில் தனது கவித்திறனை சமர்ப்பித்ததன் நோக்கம் என்ன?

உங்கள் கட்சியில் சும்மா நேத்துவந்து சேர்ந்தவர்களையெல்லாம் நான் இங்கே சுட்டிக்காட்டவில்லை. பொலிட்பீரோ வரை வந்துவிட்ட போதிலும், தனது பார்ப்பன அடையாளங்களில் முதன்மையான பூணூலைக்கூட அணிந்தே திரியும் 'முற்போக்கு'வாதிகளை மனதில் கொண்டே இதனை எழுதினோம்.

சங்கரன் நம்பூதிரியைப்பற்றிய எமது கருத்து தவறானதா? சரியா? என்பதற்கு நேரிடையான பதில் எனக்கு வேண்டும். சோம்நாத்பாப்பானின் பூணுலுக்குள்ளிருக்கும் மர்மங்களை இங்கே விவாதப்படுத்தவேண்டும். இதைவிடுத்து உமது வழக்கமான மொன்னைத்தனமான விவாதப்போக்கு வாசகர்களிடையே கேலிக்குரியதாக்கப்படும்.

உம்மை ம‌தித்து இவ்வ‌ள‌வு பெரிய‌ ப‌தில் எழுதியிருப்பது ரொம்ப‌ அதிக‌மாக‌த்தான் தோன்றுகிற‌து.