Friday, March 14, 2008

தில்லைச் சிற்றம்பலம் ஏறியது தமிழ்! ஆலயத் தீண்டாமை அகலும் வரை ஓயாது எமது சமர்!!


அன்பார்ந்த உழைக்கும் மக்களே!


தில்லை நடராசன் கோயிலின் திருச்சிற்றம்பல மேடையில் மார்ச் 2ஆம் நாள் காலையில் தமிழ் ஒலித்தது. 'சிற்றம்பல மேடையில் நின்று தமிழ் பாடக்கூடாது, தமிழன் பாடக்கூடாது' என்று தீட்சிதப் பார்ப்பனர்கள் அந்தக் கோயிலில் நிலைநாட்டி வந்த மொழித் தீண்டாமை வீழ்ந்தது.

இது ஒரு வரலாற்றுச் சாதனை! நந்தனையும் பெற்றான் சாம்பானையும் பலி கொண்ட தீட்சிதர்கள், வள்ளலாரையும் முத்துத்தாண்டவரையும் 'ஜோதி'யில் கலக்க வைத்த தீட்சிதர்கள், தேவாரத்தை முடக்கிவைத்து, மன்னன் இராசராசனுக்கே சவால் விட்ட தீட்சிதர்கள், பிரதமர்கள் முதல் நீதிபதிகள் வரை அனைவரையும் தமது குடுமியில் முடிந்து வைத்துக்கொண்டு, அக்கோயிலையே தமது பூர்வீகச் சொத்தென்று உரிமை கொண்டாடும் தீட்சிதர்கள், சிற்றம்பல மேடையை சீட்டிக்கட்டு மேடையாகவும், ஆயிரங்கால் மண்டபத்தை மதுபான விடுதியாகவும், கோயில் திருக்குளத்தைப் பிணம் மறைக்கும் கொலைக்ககளமாகவும், ராஜ கோபுரத்தை காமக்களியாட்ட மன்றமாகவும் மாற்றிவிட்டு, மயிரளவும் அச்சமின்றி மதர்ப்புடன் திரிந்து வந்த தீட்சிதர்கள்...


மார்ச் 2ஆம் நாளன்று முதன் முறையாக வீழ்த்தப்பட்டார்கள்.
தேவாரம் பாடிய 'குற்றத்துக்காக' 8 ஆண்டுகளுக்கு முன் இதே சிற்றம்பல மேடையிலிருந்து சிவனடியார் ஆறுமுகசாமியின் கையை உடைத்துத் தூக்கி வீசினார்கள் தீட்சிதர்கள். இன்று தனது 79 வயதில் கண்கள் மங்கி கால்கள் தள்ளாடிய போதிலும், மனதில் சுயமரியாதை உணர்வு குன்றாத அந்தச் சிவனடியாரை, யானை மீதேற்றி அதே சிற்றம்பல மேடையில் கொண்டு வந்து இறக்கினார்கள், செஞ்சட்டையனிந்த எமது தோழர்கள்.


'சிற்றம்பல மேடையில் பக்தர்கள் அனைவரும் தேவாரம் பாடலாம்' என்று பிப்.29 ஆம் தேதியன்று ஆணை பிறப்பித்துவிட்டது அரசு. எனினும், தீண்டாமை வெறி பிடித்த‌ தீட்சித‌ர்க‌ள் அத‌னை ம‌திக்க‌வில்லை. ஆறுமுக‌சாமி பாட‌த் தொட‌ங்கிய‌வுட‌ன் க‌ருவ‌றையை மூடினார்க‌ள்; ந‌ட‌ராச‌னுக்குக் குற்க்கே ந‌ந்தியாய் ம‌றைத்து நின்றார்க‌ள். சூதிர‌ன் வாயிலிருந்து வ‌ரும் நீச‌ பாஷையான‌ த‌மிழ், இறைவ‌னின் காதில் நுழைந்து விட‌க்கூடாது என்ப‌தற்காக‌ ஊளையிட்டார்க‌ள் ஆறுமுக‌சாமியை அடித்தார்க‌ள்: அர‌சு ஆணையை அம‌ல் ப‌டுத்த‌ வந்த‌ போலீசு அதிகாரிக‌ளையும் தாக்கினார்க‌ள். ஆயிர‌மாண்டுக‌ளாய் இந்த‌ ம‌ண்ணைப்பிடித்தாட்டி வ‌ரும் சாதிப்பேய் ம‌லையேற‌ ம‌றுத்து 'ஊழிக்கூத்து' ஆடிய‌தை அன்று நாடே க‌ண்ட‌து; ந‌ட‌ராச‌னும் க‌ண்டான். இந்த‌ப் பார்ப்ப‌ன‌ வெறிக்கூத்தை வென்ற‌ட‌க்கிய‌ பின்ன‌ர்தான் அம்ப‌ல‌த்தில் ஏறிய‌து....த‌மிழ்!

இது நெடிய‌தொரு போராட்ட‌ம், சிற்ற‌ம்ப‌ல‌ மேடையேறித் தேவார‌ம் பாட‌ப் ப‌ல‌முறை முய‌ன்றிருக்கிறார் ஆறுமுக‌சாமி. ஒவ்வொரு முறையும் அவ‌ரைத் துர‌த்தியிருக்கிறார்க‌ள் தீட்சித‌ர்க‌ள். "தேவார‌ம் பாட‌த் த‌டையா, இந்த‌ அநீதியைக் கேட்பாரில்லையா?" என்று துண்ட‌றிக்கைக‌ளை அச்சிட்டுத் த‌னியொரு ம‌னித‌னாக‌ நின்று சித‌ம்ப‌ர‌ம் கோயிலுக்கு வ‌ருகின்ற‌ ப‌க்த‌ர்க‌ளிட‌மெல்லாம் விநியோகித்திருக்கிறார். ப‌ய‌ன் ஏதும் விளைய‌வில்லை.

8.5.2000 அன்று த‌ன்ன‌ந்த‌னியனாக‌ச் சிற்ற‌ம்ப‌ல‌ மேடை ஏறிப் பாட‌த் தொட‌ங்கினார் ஆறுமுக‌சாமி. வாய் திற‌ந்து அடியெடுத்த‌ மறுக‌ண‌மே அவ‌ரை அடித்து வீசினார்க‌ள் தீட்சித‌க் காலிக‌ள். ஆட‌ல்வ‌ல்லான் சாட்சியாக‌ ந‌ட‌ந்தது இந்த‌ அட்டூழிய‌ம். ஆனால் கேட்பார் யாருமில்லை. முறிந்த‌ கையுட‌ன் காவ‌ல் நிலைய‌ம் சென்று புகார் கொடுத்தார் ஆறுமுக‌சாமி, ஒப்புக்கு ஒரு வ‌ழ‌க்கு ப‌திவு செய்த‌து போலீசு. 'சாட்சியில்லை' என்று தீட்சித‌ர்க‌ளை விடுவித்த‌து நீதிம‌ன்ற‌ம். வ‌ழ‌க்காட‌க் காசில்லாம‌ல், இல‌வ‌ச‌மாய் வாதாட‌ ஒரு வ‌க்கீலைத் தேடி ம‌னித‌ உரிமைப் பாதுகாப்பு மைய‌த்தின் வ‌ழ்க்குரைஞ‌ர் ராஜுவிட‌ம் வ‌ந்து சேர்ந்தார் ஆறுமுக‌சாமி. " இது வெறும் ம‌னித‌ உரிமைவ‌ழ‌க்க‌ல்ல‌; ம‌க்க‌ளை ந‌சுக்கிக் கொண்டிருக்கும் பார்ப்ப‌னிய‌ச் ச‌ழ‌க்கு" என்ப‌தால், ஆறுமுக‌சாமியை ம‌.க‌.இ.க‌.வின் த‌மிழ் ம‌க்க‌ள் இசைவிழா மேடைக்கு அழைத்து வ‌ந்தார் வ‌ழ‌க்குரைஞ‌ர் ராஜு. "தீட்சித‌ர்க‌ளின் கொட்ட‌த்தை ஒடுக்குவோம்! தில்லைச் சிற்ற‌ம்ப‌ல‌ மேடையில் த‌மிழை அர‌ங்கேற்றுவோம்!" என‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள்முன் அன்று அறிவித்தோம்.

கடந்த 4 ஆண்டுகளில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம், ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகளின் முன்முயற்சியில், சிதம்பரம் நகரின் விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., தி.க. போன்ற அமைப்புகளின் பங்களிப்புடன் சிதம்பரத்தில் எண்ணற்ற பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் வி.வி.சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகண் போன்றோர் இம்முயற்சிக்கு துணை நின்றிருக்கின்றனர். நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் வழியாக இப்பிரச்சினையை நாடே அறிந்திருக்கிறது. எமது தோழர்களும் மனித உரிமைப் பாதுகாப்புய் மையத்தின் இளம் வழக்குரைஞர்களும் இரவு பகலாக இதற்குப் பாடுபட்டிருக்கிறார்கள். எல்லா முயற்சிகளையும் நீதிமன்றத்தின் துணை கொண்டும், அதிகாரத் தாழ்வாரங்களில் அவர்கள் பெற்றிருக்கும் செல்வாக்கைக் கொண்டும் முடக்கி வந்திருக்கிறார்கள் தீட்சிதர்கள்.
'சிற்றம்பலத்தில் தேவாடம் பாடலாம்' என்ற இந்த அரசாணை தானாக வந்துவிடவில்லை; பல்வேறு சதிகளையும் மீறி அரசாங்கத்தின் வாயிலிருந்து இந்த அரசாணையை நாங்கள் வரவழைத்திருக்கிறோம். அரசாணை வந்த மிறகும் தமிழை அம்பலத்தில் ஏற்றுவதற்காக அக்கோயில் வாசலிலே அன்று தடியடி பட்டு இரத்தம் சிந்தியிருக்கிறார்கள் எமது தோழர்கள். மார்ச் 2ஆம் நாள் மாலை ஆறுமுகசாமியும் எமது தோழர்களும் சிறைப்படுத்தப்பட்டனர். அடுத்தநாள் 'சிற்றம்பல மேடையேறித் தமிழ் பாட யாரேனும் ஒரு சிவனடியார் வருவார்' என்று நாங்கள் காத்திருந்தோம். அடியார்கள் இல்லை, ஓதுவார்கள் இல்லை, தமிழ் ஆர்வலர்கள் இல்லை, ஒருவரும் வரவில்லை. இந்த அடிமைத்தனத்தையும் கோழைத்தனத்தையும் கண்டு மனம் நொந்து எமது தோழர்களே சிற்றம்பலம் ஏறிப்பாடினார்கள். அங்கே நாங்கள் நடத்தியது வழிபாடு அல்ல; இழி மொழி என்று தமிழையும், சூத்திரர்‍...பஞ்சமர் என்று உழைக்கும் மக்களையும் இழிவுபடுத்தும் பார்ப்பனக் கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டம்!

"அப்பாவி சிவனடியாரைப் பயன்படுத்டிக்கொண்டு, ஆத்திகர்களின் பிரச்சினையில் நாத்திகர்களான நக்சலைட்டுகள் புகுந்து ஆதாயம் தேடுகிறார்கள்" என்று அலறுகிறது ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பல். மணல் திட்டை இடித்தால் இந்துக்களின் மனம் புண்படும் என்று கூறும் பா.ஜனதா, சு.சாமி, ஜெயலலிதா கும்பல் தேவாரத்துக்காகக் குரல் கொடுப்பதை நாங்களா தடுத்தோம்? சிற்றம்பல மேடையில் தமிழ் ஏறுவதையும், கருவறைக்குள் பார்ப்பனரல்லாதார் நுழைவதையும் சகிக்கவொண்ணாத இந்தச் சாதிவெறியர்கள், இதை ஆத்திகர்...நாத்திகர் பிரச்சினையென்று திசைதிருப்புகிறார்கள்.

அன்று அப்பாவி சிவ‌ன‌டியாரை அடித்து வீழ்த்திய‌ தீட்சித‌ர்க‌ள் ஆத்திக‌ர்கள்தான். தில்லையைச் சுற்றியிருக்கும் திருவாவ‌டுதுறை, திருப்ப‌ன‌ந்தாள், த‌ரும‌புர‌ம் போன்ற‌ ஆதீன‌ங்க‌ள் அனைவ‌ரும் ஆத்திக‌ர்க‌ள்தான். சைவ‌மும் த‌மிழும் பிசைந்து வ‌யிறு வ‌ள‌ர்ந்த்த‌ இந்த‌த் துற‌விக‌ளோ, ப‌ட்ட‌ங்க‌ளும் விருதுக‌ளும் சூடிய‌ சைவ‌ அறிஞ‌ர்க‌ளோ திருச்சிற்ற‌ம்ப‌ல‌ மேடையேறுவ‌தை நாங்க‌ளா த‌டுத்தோம்? ஆதீன‌ங்க‌ளாலும் ஆன்மீக‌வாதிக‌ளாலும் ஏள‌ன‌ம் செய்து புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்ட‌ பிற‌குதான், ஆண்ட‌வ‌னை ம‌றுக்கும் க‌ம்யூனிஸ்டுட‌ளான‌ எங்க‌ளைத் தேடி வ‌ந்தார் ஆறுமுக‌சாமி.


சைவ‌ மெய்ய‌ன்ப‌ர்க‌ளெல்லாம் ப‌த‌வியும் ப‌விசும் பெறுவ‌த‌ற்காக‌ பார்ப்ப‌ன‌க் கும்ப‌லுட‌ன் க‌ள்ள‌ உற‌வு வைத்திருப்ப‌த‌னால்தான் சிற்ற‌ம்ப‌ல‌ மேடையில் த‌மிழ‌ன் ஏற‌ முடிய‌வில்லை. த‌மிழைத் த‌ம் பிழைப்புக்கான‌ க‌ருவியாக‌ மாற்றிக் கொண்ட‌ கட்சிக‌ளும் அமைப்புக‌ளும் செய்துவ‌ரும் துரோக‌த்தினால்தான் ஏழைத் த‌மிழ் அம்ப‌ல‌மேற‌ முடிய‌வில்லை. இல்லையென்றால் தேவார‌த்தை மீட்டெடுத்த‌ தில்லைக் கோயிலிலேயே அத‌னைப் புதைப்ப‌த‌ற்கு தீட்சித‌ர்க‌ளால் இய‌ன்றிருக்குமா?


சிற்ற‌ம்ப‌ல‌த்தில் த‌மிழை ஏற்ற‌, தாய்மொழியில் இறைவ‌னைப் போற்ற‌ ப‌க்த‌னுக்கு அர‌சாணையின் துணை எத‌ற்கு? போலீசின் துணைஎத‌ற்கு?

ச‌ட்ட‌ம் உரிமையை வ‌ழ‌ங்க‌த்தான் முடியும். அந்த‌ உரிமையைப் ப‌ய‌ன்ப‌டுத்தும் உண‌ர்வை வ‌ழ‌ங்க‌ முடியாது. அந்த‌ உண‌ர்வென்ப‌து ப‌க்தி உண‌ர்வ‌ல்ல‌. பார்ப்ப‌ன‌ ஆதிக்க‌த்திற்கு எதிரான‌ சுய‌ம‌ரியாதை உண‌ர்வு. சாதி ஏற்ற‌த்தாழ்வுக்கு எதிரான‌ ச‌ம‌த்துவ‌ உண‌ர்வு. ச‌ம‌ஸ்கிருத‌ ஆதிக்க‌த்துக்கு எதிரான‌ த‌மிழ் உண‌ர்வு.

தில்லையில் நாம் பெற்றிருக்கும் இந்த‌ வெற்றி ஒரு துவ‌க்க‌ப்புள்ளி. தீட்சித‌ர்க‌ள் ச‌ர‌ண‌டைய‌வுமில்லை, சாதி ஆதிக்க‌த்தை விட‌வுமில்லை. ந‌ந்த‌ன் நுழைந்த‌ தெற்கு வாயிலை அடைத்து தீட்சித‌ர்க‌ள் எழுப்பியுள்ள‌ தீண்டாமைச் சுவ‌ர் ஒரு அவ‌மான‌ச் சின்ன‌மாக‌ இன்னும் நின்று கொண்டிருக்கிற‌து. அது த‌க‌ர்க்க‌ப்ப‌ட‌ வேண்டும். தீட்சித‌ர்க‌ள் திருடிக்கொண்ட‌ தில்லைக் கோயிலை அற‌நிலைய‌ ஆட்சித்துறை கைப்ப‌ற்ற‌ வேண்டும்.


ச‌ம‌ஸ்கிருத‌ வ‌ழிபாட்டை அக‌ற்றுத‌ல், த‌மிழ் வ‌ழிபாடு, அனைத்து சாதியின‌ரும் அர்ச்ச‌க‌ராத‌ல்... என‌ நீண்ட‌தொரு போராட்ட‌த்தை நாம் ந‌ட‌த்த‌ வேண்டியிருக்கிற‌து. ந‌ட‌த்துவோம்!



வ‌ர்க்க‌ம், சாதி, இன‌ம், மொழி, பாலின‌ம் போன்ற‌ ஒவ்வொரு துறையிலும் நில‌வும் ஆதிக்க‌த்தை எதிர்த்து க‌ம்யூனிஸ்டுக‌ளாகிய‌ நாங்க‌ள் போராடுவோம்! அன்று, பார்ப்ப‌ன‌ ஆதிக்க‌த்தையும் தீண்டாமையையும் எதிர்த்து திருவ‌ர‌ங்க‌ம் க‌ருவ‌றைக்குள் நுழைந்து அர‌ங்க‌நாத‌னைத் தீண்டினோம்! இன்று, சிற்ற‌ம்ப‌ல‌த்தைத் தீண்டியிருக்கிற‌து த‌மிழ்! எல்லாவ‌கைத் தீண்டாமைக‌ளையும் ஆதிக்க‌ங்க‌ளையும் எதிர்த்துப் போராடுவோம்!
உங்க‌ள் துணையுட‌ன் வெற்றியும் பெறுவோம்!

இவ‌ன்
ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம்
விவ‌சாயிக‌ள் விடுத‌லை முன்ன‌னி
புர‌ட்சிக‌ர‌ மாண‌வ‌ர்...இளைஞ‌ர் முன்ன‌னி
புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌த் தொழிலாள‌ர் முன்ன‌னி


தொட‌ர்புக்கு:
இரா. சீனிவாச‌ன்,
#16, முல்லைந‌க‌ர் வ‌ணிக‌ வ‌ளாக‌ம்,
2 ஆவ‌து நிழ‌ற்சாலை,
அசோக்ந‌க‌ர்,
சென்னை ‍ 600083.
தொலைபேசி: 23718706
கைபேசி: 9941175876.

Monday, March 3, 2008

சி.பி.எம். கட்சியின் சாதீய எதிர்ப்பு நாடகமும், சந்திப்பு அவர்களின் பின்னனி (ஜால்ரா) இசையும்.....

'தெண்ணை மரத்தில் இடி இடித்தால், பணை மரத்தில் எப்படி நெறிகட்டும்?' என்பார்கள் நமது முன்னோர்கள். அதைப் போலவே, நாம் பாரதியை விமர்சிப்பது, சந்திப்புக்கு வயிற்றில் புளிகரைக்கிறது. இப்படித்தான் தோழர். மதிமாறன் "'பாரதி'ய ஜனதா பார்ட்டி" என்ற தலைப்பில் தலித் முரசு இதழில் பாரதியின் 'பார்ப்பன சார்பு' தன்மையை அம்பலப்படுத்தி தொடராக எழுதிய போது, சிலர் நான் பாரதியின் மானத்தைக் காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று கிளம்பிவந்து எதுவும் போனியாகததால் கிளம்பிய கூடாரத்திலேயே தஞ்சம் புகுந்து கொண்டனர். இது இவர்களின் வழக்கமான வாதிடும் முறை. சந்திப்பு, இவர்கள் பாசறையின் கடைசி பெஞ்ச் மாணவன்.அவர் நமது விமர்சனங்களை சந்திக்கமுடியாமலிருப்பதன் காரணமும் இதுதான். இருப்பினும் அவருக்காக தொடர்ந்து நாம் பதிலெழுத வேண்டியிருப்பது ஏன் என்றால்?! அவருடைய வாசகர்களில் சிலர் நம்மிடம் தொடர்ந்து வற்புறுத்திக் கேட்பதால் தான்.இனி விஷயத்திற்கு வருவோம்....


முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போல், 'தமிழ்மணி' எனும் பெயருக்குள்ளே மறைந்து கொண்டு தங்கள் பூணூலுக்குள்ளேயே ஒருவரையொருவர் முடிந்துவைத்துக் கொண்டு (கமுக்கமாக) பார்ப்பணியத்தை புதுப்பிக்க ஒருசில அம்பிகள் கிளம்பியுள்ளது சில நாட்களுக்கு முன் அம்பலமாகியது எல்லோருக்கும் தெரிந்ததே. அந்த அம்பிகள் கூட 20 வரிகளுக்கு இந்த சமூக அநீதிகளைப்(?!) பற்றி அங்கலாய்த்துவிட்டு, பிறகு தான் ஒரு பார்ப்பனிய வார்த்தையை பார்த்து சொருகுகிறார்கள் தங்கள் படைப்புகளில், நம்முடைய கழுகுப்பார்வையில் பட்டு அம்பலமாகிவிடாமல் தப்பித்துக் கொள்வதற்காக. (அவ்வாறிருக்கும் போதே, அவர்களை நமது தோழர் 'சம்பூகன்' குடுமியைப் பிடித்து இழுத்துவந்து முச்சந்தியில் வைத்து அம்பலப்படுத்திவிட்டார்.)


இதே பாணியைத்தான் பாரதியும் மேற்கொண்டார். தன்னுடைய பார்ப்பனிய, இந்துத்துவ சார்பு நிலையை வெளிப்படையாகத் தெரியாமல் மூடிமறைப்பதற்கு பாரதி கடைபிடித்த 'சித்து விளையாட்டு'த்தான் இந்த சாதீயம், பெண்ணீயம், தேசவிடுதலைப் புராணம், சோவியத்துப் புரட்சி, இன்னபிற இத்தியாதிகளெல்லாம்.


இது பாரதியின் பாணியோ அல்லது தமிழ்மணியின் பாணியோ அல்ல தோழர்களே. தம்மைப் பொதுமைப்படுத்திக் கொண்டு அதன் மூலமாக பெரும்பாண்மை மக்களின் கருத்தாக்கமாக தங்களது செயல்களை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக உருவகப்படுத்த‌ பார்ப்பனியம் செய்கின்ற 'கண்கட்டி வித்தை' தான் அது.


பாரதி தன்னை (பார்ப்பன) சாதிச் சார்பற்றவனாகக் காட்டிக் கொள்வதற்காக எவ்வளவு முயன்றானோ, அதனினும் கூடுத‌லாக தனது முயற்சிகளை சி.பி.எம். செய்ய வேண்டியுள்ளது. பாரதிக்கு ஓட்டு தேவைப்படவில்லை, சி.பி.எம்மிற்கு தேவைப்படுகிறது, இதுதான் இவர்களுக்கிடையிலான ஒற்றுமையும் வேற்றுமையும். இதிலிருந்து வெளித்தோன்றுபவைதான் சந்திப்பு போன்றோர்களின் 'பாரதி புராணம்'. இப்படி வெளிப்படையான பார்ப்பன சார்பு நிலையை அக்கட்சி நிரந்தரமாகக் கொண்டிருப்பது எப்படி? ஏன்? என்பதை அனைவருக்கும் (சந்திப்பு உள்பட)தெரியப்படுத்துவதுதான் தான் இந்த பதிவின் நோக்கம்.


'புரட்சித்தலைவி' எனும் 'ஜெ'வின் திருநாமத்தில் வரும் 'புரட்சி'யையே நமது காம்ரேடுகள் 'தேசப் புரட்சி'யாகப் புரிந்து கொண்டு அல்லது நாட்டு மக்களைக் குழப்பிவிட்டு ஓட்டுகளின் மூலம் ஆதாயம் தேடுபவதைப் போலத்தான் பாரதியின் 'சொவியத்துப் புரட்சி'யைப் பார்த்து புளகாங்கிதமடைகிறார்கள். அதையே தங்களது புரட்சிப்பாதையாக தெரிவுபடுத்துகிறார்கள்.தோழர். ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டதைப் போல, சோவியத்தின் பாட்டாளிவர்க்க புரட்சி (அதாவது அக்டோபர் புரட்சி)க்கு பாரதியின் குடுமி ஆடவில்லை. அதற்கு முன் நடந்த முதலாளித்துவப் புரட்சிக்குத்த்தான் ஆடியது என்பதை காம்ரேட். சந்திப்பு அவர்களுக்குத் தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.


ஆனால் பார‌தியும் சரி, சி.பி.எம்மும் சரி பெண்ணீயத்தை, இன்னபிறவற்றைப் போல சாதீயத்தை மேலோட்டமாக விட்டுவிடுவதில்லை. அதில் தான் தமது 'தொழில் நுட்பத்தை' இருவருமே கடைபிடிக்கிறார்கள். ஏனெனில் பார்ப்ப‌னீய‌த்தின் ஆணிவேர் இங்குள்ள‌ சாதிய‌ம்ச‌ங்க‌ளில் தான் உள்ள‌து என்ப‌து பார‌திக்கும் தெரியும் அவ‌ன‌து சீட‌ர்க‌ளான‌ ச‌ந்திப்புவ‌கைய‌றாவுக்கும் தெரியும். அத‌ற்கு இவ‌ர்க‌ளின் சாதீய‌த்திற்கெதிரான‌ செய‌ல்க‌ளிலேயே பார்க்க‌லாம். இவ‌ர்க‌ளின் சாதீயத்திற்கெதிரான போராட்டங்களின் இல‌க்கு சாதிய‌ எதிர்ப்பு அல்ல‌, சாதீய‌ ஒற்றுமை தான்.



இந்த‌ப் போலிக‌ளின் சாதிய‌ எதிர்ப்புண‌ர்விற்கு சாட்சிய‌ம் வேண்டுமா?, ஒருசில‌ மாத‌ங்க‌ளுக்கு முன் 'வெகுவிம‌ரிசையாக‌' கொண்டாட‌ப் ப‌ட்ட 'தேவ‌ர் ஜெய‌ந்தி' என்ற 'தேவ‌ர் சாதி வெறிய‌ன் முத்துராம‌லிங்க‌த்தின்' பிற‌ந்த‌ நாள் அன்று, ப‌சும்பொண்ணில் (முத்துராம‌லிங்க‌த்தின் நினைவிட‌த்தில்) ம‌ல‌ர்வ‌ளைய‌த்துட‌ன் நின்றுகொண்டு ப‌ல்லிளித்த‌ என்.வ‌ர‌த‌ராஜ‌ன் அவ‌ருடைய அணியினின‌ரான‌ பார‌தியின் வ‌ழித்தோன்ற‌ல்க‌ளை ச‌ற்று உற்று நோக்கிப் பாருங்க‌ள். அவ‌ர்க‌ளின் சொற்க‌ளில் சாதீய‌ எதிர்ப்பையும், செய‌ல்க‌ளில் சாதிய‌ பிணைப்பையும் உய‌ர்த்திக் காட்டுவார்க‌ள்.


இத‌ற்கு ப‌தில் சொல்கிறேன் என்று, ச‌ந்திப்பு அவ‌ர்க‌ள் (நாம் மிக‌வும் ம‌ரியாதை குறைவாக‌ எழுதுகிறோம் என்று சொல்கிறார‌ல்ல‌வா? அத‌னால் தான் இந்த‌ 'ச‌ந்திப்பு அவ‌ர்க‌ள்' எல்லாம்) "க‌ருணாநிதி, ஜெ, போன்றோர் கூட‌த்தான் சென்று அஞ்ச‌லிசெலுத்தியுள்ள‌ன‌ர், எங்க‌ள் த‌லைவ‌ரைம‌ட்டுமே விம‌ர்சிப்ப‌து சி.பி.எம். என்ற‌ காழ்ப்புண‌ர்ச்சியால் தான்" என்று கேட்டால் யாரும் ஆச்ச‌ரிய‌ப்ப‌ட‌ வேண்டாம்.



சாதியத்திற்கு எதிராக தாழ்த்தப் பட்டோருக்கு பாரதி பூணூல் போட்டுவிட்டாராம், 'ஜெ... வைக்கோ'வுக்கு போட்டதைப் போல... அல்ல‌து சுப்பிர‌ம‌ணிய‌சாமி உச்ச‌ நீதிம‌ன்ற‌த்துக்கு போட்ட‌தைப் போல...(இதைக் கேட்ட‌ல் ந‌ம‌து காம்ரேடுக‌ள் 'ப‌ர‌தியை அவ‌ம‌தித்த‌தைக் கூட ஏற்றுக் கொள்ள‌லாம், கோர்ட்டை அவ‌ம‌திப்ப‌து அபாய‌க‌ர‌மான‌து' என்று பொழிப்புரை கூற‌லாம்.) அத‌னால் தான் CPIM.ன் மூத்த‌ த‌லைவ‌ரும் பாராளும‌ன்ற‌ சபாநாய‌க‌ருமான 'சோம்நாத் அய்யர்' த‌ம‌து பேர‌க்குழ‌ந்தைக‌ளுக்கு பூணூல் கல்யாண‌ம் செய்து வைக்கிறார். பார‌தியின் பார்ப்ப‌ன‌த் த‌ன்மையினை இவ‌ர்க‌ள் விம‌ர்சிக்க நேர்ந்தால், சோம்நாத் அய்ய‌ரை விட்டுவிட முடியுமா? இவ‌ர்க‌ளின் எழுத்துக்க‌ளில் என்றைக்காவ‌து 'பார்ப்ப‌ன‌ன்' என்ற‌ வார்த்தையை பார்க்க‌முடியுமா? ஏனெனில் 'பார்ப‌ன‌ன்' என்றால் க‌டுமையான‌ வார்த்தை, இப்ப‌டி எழுதினால் ம‌க்க‌ளிட‌மிருந்து த‌னிமைப்ப‌டுத்த‌ப் ப‌டுவீர்க‌ள் என்கிறார்க‌ள். சமூக‌த்தில் 'ப‌றைய‌ன்' இன்னும் அப்ப‌டித்தானே அழைக்க‌ப் ப‌டுகிறான்.


இதைக்கேட்டால், பார்ப்ப‌ன‌க் கேடிக‌ளை வ‌ர்க்க‌க் க‌ண்ணோட்ட‌த்தோடு பார்க்க‌ச் சொல்லி ந‌ம‌க்கு வ‌ர்க்க‌ பாட‌ம் புக‌‌ட்ட‌வ‌ருவார்க‌ள். பார‌தியிட‌மும், சுஜாதாக்க‌ளிட‌மும் சென்று வ‌ர்க்க‌ ஒற்றுமை பேனுவார்க‌ள். அவர்கள் சார்ந்திருக்கிற வர்க்கம் என்ன என்பது 'ஊரறிந்த இரகசியம்', அப்படியானால், அவ‌ர்க‌ள்சார்ந்திருக்கிற‌ வ‌ர்க்க‌ம் தான் எமது வ‌ர்க்க‌ம் என்று ப‌ச்சையாத் தெரிவிக்க‌ வேண்டிய‌துதானே.


சி.பி.எம்மின் பார்ப்ப‌ன‌த்த‌ன்மைக்கு முதலில் ப‌ச்சைக்கொடி காட்டிய‌வ‌ர் யார் தெரியுமா?இந்தியாவுக்கான‌ மார்க்சிய‌ம் என்று சொல்லி மார்க்சிய‌த்தை பார்ப்ப‌னீய‌த்திற்குள் ம‌றைத்துவைக்க‌ முனைந்த‌வ‌ர் யார் தெரியுமா?, "வேத‌ங்க‌ள், உப‌நிஷ‌த‌ங்க‌ள் முத‌லிய‌ பார‌தீய‌ க‌லாச்சார‌ப் பொக்கிஷ‌ங்க‌ளும் மார்க்சிய‌..லெனினீய‌த்தின் புர‌ட்சிக‌ர‌த் த‌த்துவமும் இணைந்துள்ள‌துதான் நான் உய‌ர்த்திப் பிடிக்கின்ற 'இந்திய‌ மார்க்சிய‌ம்'. நான் பிர‌திநிதித்துவ‌ப் ப‌டுத்துகின்ற‌ மார்க்சிய‌ம்..லெனினிய‌ம் தான் உண்மையான‌ பார‌தீய‌த்தத்துவ‌ம் என்று கூட‌ உரிமை பாராட்டுவேன்" என்று சொன்ன‌வ‌ர் ஆதிச‌ங்க‌ர‌ரோ, விவேகான‌ந்த‌ரோ அல்ல‌ தோழ‌ர்களே, அது 'கேர‌ள‌த்து ஆதிச‌ங்க‌ர‌ன்' என்று த‌ன்னைத் தானே அடைய‌ள‌ம் காட்டிக் கொண்ட‌ 'ச‌ங்க‌ர‌ன் ந‌ம்பூதிரி'யாகிய‌ E.M.S.ந‌ம்பூதிரிபாடுதான்.

மார்க்சிய‌ம் எனும் சூரிய‌னை, பார்ப்ப‌னிய‌க் கைக‌ளால் ம‌றைத்துவிட‌முடியும் என்று ந‌ம்பிய‌ ம‌டைய‌ன். இவ‌ன் தான் உல‌க‌த்துக்கே மார்க்ஸ் பெய‌ரைச் சொல்லி எப்ப‌டி ஓட்டுப் பிச்சை எடுப்ப‌து என்ப‌தையும், அத‌ன் மூல‌ம் தான் சார்ந்த 'பார்ப்ப‌ன, முத‌லாலித்துவ' வ‌ர்க்க‌ங்க‌ளுக்கு எப்படி சேவை செய்வது என்பதையும் சொல்லிக்கொடுத்த‌வ‌ன்.



இவ்வாறாக‌,எப்படி, எதற்காக, பார்ப்ப‌னீய‌ம் த‌ன்னைப் பொதுமைப் ப‌டுத்திக் கொள்வ‌த‌ற்காக தன‌து பாசிச‌ முக‌த்தை ம‌றைக்கிற‌தோ, அதேபோல் தான் சி.பி.ஐ/எம் போன்ற‌ போலிக‌ள் த‌ங்க‌ள‌து பாசிச‌ கொலைமுக‌த்தின் முக‌மூடியாக‌ மார்க்சிய‌த்தைப் ப‌ய‌ன் ப‌டுத்துகிறார்க‌ள். சாதீய‌த்திற்கெதிராக‌வும், பெண்ணீய‌த்திற்கெதிராக‌வும் தான் போராடுவ‌தாக‌ காட்டிக் கொள்வ‌தும் அத‌னை பார‌தியின் வ‌ழித்தோன்ற‌ல்க‌ளாய் சித்த‌ரிப்ப‌துவும் எத‌ற்கென்றால், இதே சாதீய‌த்தையும், பெண்ணீய‌த்தையும் நிஜ‌க் கதாநாய‌கனாய் க‌ள‌த்தில் ச‌ந்தித்த 'பெரியார்' எனும் பேர‌லையிலிருந்து த்ம்மையும் பார்ப்பனியத்தையும் காத்தும் கொள்ளும் 'க‌யமை'யுண‌ர்வோடுதான்.

ந‌ன்றி.
ப‌க‌த்.

Saturday, March 1, 2008

"எவரெஸ்ட்டைக் குள்ளமாக்கிய மாவோயிஸ்டுகள் நினைவோடு.."

பனிப்பூச்சால்
இறுக்கி
மெழுகப்பட்ட
'இந்து ராச்சியத்தின்'
வயிற்றைக்கிழித்து
வெளிக்கிளம்பிவருகின்ற
'சிவப்பு இரத்தத்தின்'
அடையாளமாக
நமது
'செங்கொடி'யைத்
தவழவிட்ட
நமது
நேபாள
மாவோயிசத்
தோழர்களுக்கு

'வீரவணக்கம்'

தெரிவித்து
என்னுடைய
இந்த புதிய
வளைதளத்தைத்
துவக்குகிறேன்.

தொட‌ர்ந்து ச‌ந்திப்போம்.....

தோழ‌மையுட‌ன்,
ப‌க‌த்.